முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் எச்சரிக்கை எதிரொலி: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      தமிழகம்
Payal storm 2023-10-22

சென்னை, தமிழகத்தில் புயல் எச்சரிக்கை காரணமாக 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.  

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 3-ம் தேதி வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என்று பெயரிடப்பட உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 900 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 800 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாகவும், அதன்பின் புயலாக மாறி தெற்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 5-ம் தேதி மாலை கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, காரைக்கால், புதுச்சேரி, தூத்துக்குடி, கடலூர், நாகை, பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களில் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளதை குறிக்கும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மேலும், சூறைக்காற்று வீசுவதால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து