முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னிடம் சொந்தமாக சைக்கிள்கூட இல்லை : விவசாயியிடம் பகிர்ந்த பிரதமர் மோடி

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      இந்தியா
Modi 2023-05-10

Source: provided

புதுடெல்லி : இப்போது வரை என்னிடம் சொந்தமாக சைக்கிள்கூட இல்லை என்று விவசாயியிடம் பகிர்ந்த பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் தேர்தல் பிரசார மேடையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா என்ற பெயரில் மத்திய அரசின் விவசாய கடன் அட்டை, கிராமப்புற வீட்டு வசதித் திட்டம், உஜ்வாலா திட்டம் போன்ற அரசு நலத்திட்டங்களையும், பயனாளிகள் அதனை நினைவுகூரும் வகையிலும் விளம்பர பிரசாரம் ஒன்றை நடத்திவருகிறது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக சமீபத்தில் கலந்துரையாடினார். ரங்பூர் கிராம சர்பஞ்ச் பல்வீர் கவுர் என்பவருடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது விவசாய கடன் அட்டையைப் பயன்படுத்தி டிராக்டர் வாங்கியதைப் பற்றி சர்பஞ்ச் பல்வீர் கவுர் பெருமையுடன் கூறினார். அப்போது அவரிடம் பேசிய பிரதமர் மோடி, உங்களிடம் டிராக்டர் இருக்கிறது. என்னிடம் சொந்தமாக சைக்கிள்கூட இல்லை என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து