முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக்கோப்பை போட்டி: தொடக்க வீரர்களாக களமிறங்க 5 பேர் இடையே கடும் போட்டி

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      விளையாட்டு
ICC 2023 06 24

Source: provided

மும்பை : டி-20 உலகக் கோப்பையில் தொடக்க வீரர்கள் யார் என்பது குறித்து 5 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

2007-ல் இந்திய அணி...

இதுவரை 8 டி-20 உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் இங்கிலாந்து (2010, 2022), வெஸ்ட் இண்டீஸ் (2012, 2016) தலா 2 முறையும், இந்தியா (2007), பாகிஸ்தான் (2009) இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) தலா ஒரு முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன. 9-வது டி-20 உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.

டோனி தலைமையில்...

ஐ.சி.சி. போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்று 10 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை டோனி தலைமையிலான அணி கைப்பற்றியது. சமீபத்தில் நடந்த ஐ.சி.சி. உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்றது. சொந்த மண்ணில் நடந்த போட்டியில் சாம்பியன் பட்டம் பெறாதது ஏமாற்றத்தை அளித்தது. தற்போது டி-20 உலகக் கோப்பை போட்டியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருக்கிறது.

கடும் போட்டி... 

டி-20 உலகக் கோப்பை போட்டிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து அவரை அணுகியதாக தகவல் வெளியானது. கடந்த ஆண்டு உலகக் கோப்பை அரைஇறுதியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு அவர் டி-20 போட்டியில் ஆடவில்லை. தென்ஆப்பிரிக்க தொடரிலும் அவர் ஓய்வு கேட்டுள்ளார். 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் தொடக்க வீரர்களாக யார் ஆடுவார்கள்? என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகிய 5 பேர் தொடக்க வரிசைக்கான போட்டியில் உள்ளனர். 

தேர்வு குழுவுக்கு...

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 20 ஓவர் தொடரில் ஜெய்ஸ்வாலும், ருதுராஜ் கெய்க்வாட்டும் தொடக்க வீரர்களாக வருகிறார்கள். அவர்கள் ஆட்டம் அதிரடியாகவே இருக்கிறது. அதே நேரத்தில் ரோகித் சர்மா, சுப்மன் கில் தொடக்க வரிசையில் அபாரமாக ஆடக் கூடியவர்கள். இதற்கிடையே அவ்வப்போது இஷான் கிஷனும் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார். இதனால் தொடக்க வீரர்களை தேர்வு செய்வதில் தேர்வு குழுவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து