முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடிந்து விழும் அபாயத்தில் இத்தாலி சாய்ந்த கோபுரம்: பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      உலகம்
Italy 2023-12-02

போலோக்னா, இத்தாலியில் 900 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த முக்கிய அடையாளமாக திகழும் கரிசெண்டா சாய்ந்த கோபுரம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இத்தாலியின் போலோக்னா நகரின் முக்கிய அடையாளமாக திகழும் கரிசெண்டா சாய்ந்த கோபுரம் 900 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. வானளாவ நிமிர்ந்து நின்ற இந்த கோபுரம், கடந்த சில ஆண்டுகளாக, படிப்படியாக சாயத் தொடங்கியது. 

இதையடுத்து அறிவியல் ஆய்வுக்குழுவினர் இந்த கோபுரத்தை ஆய்வு செய்தனர். 2019-ம் ஆண்டு முதல் தளத்தை கண்காணித்த அறிவியல் குழுவினர், சமீபத்தில் 27 பக்க அறிக்கையை வெளியிட்டனர், அதில், 

கோபுரத்தின் தன்மை மோசமாக இருப்பதாகவும், இடிந்து விழுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்திருந்தனர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான சென்சார் அளவீடுகள், இந்த எச்சரிக்கையை மேலும் தீவிரப்படுத்தின.

கோபுரம் மேலும் சாய்ந்ததாலும், செங்கற்களில் ஏற்பட்ட விரிசல் விரிவடைவதாலும் கோபுரத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன. கோபுரம் தற்போது 4 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளதாக சி.பி.எஸ். செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது. 

இத்தாலியின் மிகவும் பிரபலமான பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் 5 டிகிரி கோணத்தில் சாய்ந்திருக்கிறது. இதை ஒப்பிட்டால் கரிசெண்டா கோபுரத்தின் சாய்வு கோணம் குறைவுதான். ஆனால், கட்டிடத்தின் உறுதித்தன்மை மோசமடைந்துள்ளது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோபுரம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக நிபுணர்களின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது. அதனால், ஒவ்வொரு நிகழ்வையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று நகர செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 

கோபுரத்தை சுற்றி வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கோபுரத்தை சுற்றிலும் வலுவான வேலி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கோபுரத்தின் இடிபாடுகளை வெளியில் விழாமல் தடுத்து, சுற்றியுள்ள கட்டிடங்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு வலைகளுடன் கூடிய உலோக வளைவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

 கோபுரம்  சரிந்து விழுந்தால் என்ன ஆகுமோ என்ற நிலையில், நாங்கள் செயல்படுகிறோம். ஆனால் அது எப்போது விழும் என்று யாருக்கும் தெரியாது. மூன்று மாதங்கள் ஆகலாம், 10 ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகள்கூட ஆகலாம். விரைவில் கோபுரம் இடிந்து விழும் அபாயம் இருந்திருந்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டிருப்பார்கள் என நகர செய்தித் தொடர்பாளர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து