முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த அமலாக்கத்துறையை குற்றம் கூற முடியாது: தூத்துக்குடியில் அண்ணாமலை பேட்டி

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      தமிழகம்
Annamalai 1

தூத்துக்குடி, அமலாக்க துறையில் ஒருவர் செய்த தவறுக்காக அனைவருமே தவறானவர்கள் என்று பார்ப்பது சரியல்ல என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை ஒரு மழைக்கு கூட தாக்கு பிடிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. சென்னையில் மழை வெள்ளத்தோடு வீடுகளுக்குள் சாக்கடை நீர் செல்கிறது. மக்கள் மிகப்பெரிய அவதியை சந்தித்து வருகின்றனர். 

இந்த நிலை மாற வேண்டும். உலக அளவிலான நிபுணர்களை வரவழைத்து இதற்கு தீர்வு காண வேண்டும். முன்பு ஜெனிவாவில் இது போன்ற நிலை இருந்தது அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 

மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தவறு யார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது போன்ற நடவடிக்கை ராஜஸ்தானில் கடைசியாக நடைபெற்றுள்ளது. 

தற்போது இங்கு நடைபெற்றுள்ளது. இது முதலும் முடிவும் அல்ல, அந்தத் துறையில் ஒருவர் செய்த தவறுக்காக அனைவருமே தவறானவர்கள் என்று பார்ப்பது சரியல்ல.இது போல காவல்துறையில் ஒருவர் தவறு செய்தால் காவல்துறை முழுமையாக தவறு என்று கூற முடியுமா? 

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மற்றும் தமிழக அரசியல்வாதிகள் அரசியல் முதிர்ச்சி இன்றி பேசி வருகின்றனர்.நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வர உள்ளது. 

தெலுங்கானாவில் கடந்த முறை ஒரு இடத்தில் வென்ற நிலையில் இந்த முறை இரட்டை இலக்கங்களில் பா.ஜ.க. வெற்றி பெற உள்ளது. மிசோராமில் அந்த மாநில கட்சி வெற்றி பெரும் சூழல் உள்ளது.  சத்தீஸ்கரில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகுதான் முழுமையாக தெரியவரும்.

.தூத்துக்குடி, நெல்லையில் படுகொலைகள் நடைபெற்றுள்ளது. தமிழக முழுவதுமே கொலைக்களமாக மாறி வருகிறது. காவல்துறை சுதாரித்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டு குற்றங்களை தடுக்க வேண்டும்.

மாலத்தீவில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு அரசியல் சூழல் மாறி இருப்பதன் காரணமாக இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து