முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் வரிப்பணத்தில் கார் பந்தயம் நடத்துவது தேவையற்றது: எடப்பாடி

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      தமிழகம்
Edappadi 2020 11-16

சேலம், மக்கள் வரிப்பணத்தில் கார் பந்தயம் நடத்துவது தேவையற்றது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  

ஒருநாள் மழைக்கே சென்னை தண்ணீரில் தத்தளிக்கிறது.  முறையாக மழை நீர் வடிகால் பணிகளை தி.மு.க. அரசு நடத்தியிருந்தால் சென்னைக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.  மழை நீர் தேங்காமல் இருக்க 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து பணிகளை  மேற்கொண்டதாக தி.மு.க. அரசு கூறியது. 

நிதி ஒதுக்காமல் அம்மா உணவகத்தை மூடும் நிலைக்கு கொண்டு வந்த தி.மு.க. அரசு கார்பந்தயத்தை நடத்துகிறது.  தீவுத்திடலில் கார் பந்தயம் நடத்த 42 கோடி ரூபாய் செலவு செய்வது கண்டிக்கத்தக்கது. திட்டப் பணிகளுக்கே நிதியில்லை என்று கூறும் அரசு, கார் பந்தய சாலைக்கு நிதி ஒதுக்குகிறது. 

விளம்பரத்திற்காக மக்கள் வரிப்பணத்தில் கார் பந்தயம் நடத்துவது தேவையற்றது.  அமலாக்கத்துறை அதிகாரி குற்றம் செய்து இருந்தால் அவர் கைது செய்யப்பட்டதில் தவறு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து