முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

91-வது பிறந்தநாளை முன்னிட்டு கி.வீரமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      தமிழகம்
CM-1 2023-12-02

Source: provided

சென்னை : 91-வது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று நேரில் சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார். 

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நேற்று தனது 91-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.  கி. வீரமணி, திராவிடர் கழகத்தின் தலைவராக கடந்த 1962ல் பெரியாரால் நியமிக்கப்பட்டார்.  

கி.வீரமணியின் பிறந்தநாளையொட்டி, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில்சென்ற  முதல்வர் மு.க. ஸ்டாலின், பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோர் உடனிருந்தனர்.  மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளத்திலும் கி. வீரமணிக்கு வாழ்த்துத் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து