Idhayam Matrimony

கிராண்ட்மாஸ்டர் பட்டம்: வைஷாலி-பிரக்ஞானந்தா சாதனை

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      விளையாட்டு
Vaishali-Pragnananda 2023-1

Source: provided

சென்னை : வைஷாலி கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றதன் மூலம் உலகின் முதல் சகோதர - சகோதரி கிராண்ட்மாஸ்டர்களாக வைஷாலி - பிரக்ஞானந்தா புதிய சாதனை படைத்துள்ளனர்.

3-வது வீராங்கனை...

கிராண்ட்மாஸ்டர்  பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரி வைஷாலி தற்போது செஸ் கிராண்ட் மாஸ்டராக மாறியுள்ளார். ஸ்பெயினில் நடைபெற்ற செஸ் போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்தார். தன்னை எதிர்த்து விளையாடிய துருக்கியைச் சேர்ந்த வீரரை வென்று அவர் இந்த சாதனையைப் படைத்தார். இந்தியாவிலிருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெறும் மூன்றாவது வீராங்கனை வைஷாலி என்பது குறிப்பிடத்தக்கது. வைஷாலிக்கு முன்னதாக கொனேரு ஹம்பி மற்றும் ஹரிகா ஆகியோர் இந்தியாவிலிந்து கிராண்ட் மாஸ்டர் பட்டங்களை வென்றுள்ளனர். 

உலகின் முதல்....

வைஷாலியின் சகோதரரான பிரக்ஞானந்தா கடந்த 2018-ம் ஆண்டு அவரது 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார். தற்போது அவரது சகோதரி கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ள நிலையில், இவர்கள் உலகின் முதல் சகோதர - சகோதரி கிராண்ட் மாஸ்டர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.  கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

முதல்வர் வாழ்த்து...

முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த வாழ்த்துப் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் மூன்றாவது மற்றும் தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டராக மாறியுள்ள வைஷாலிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். 2023 ஆம் ஆண்டு உங்களுக்கு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. நீங்கள் உங்கள் சகோதரருடன் இணைந்து தற்போது உலகின் முதல் சகோதர - சகோதரி கிராண்ட்மாஸ்டர்கள் என்ற வரலாற்றைப் படைத்துள்ளீர்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து