முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் அதிகாலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மிச்சாங் புயலாக உருவாகி உள்ளது. 

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 4 மாவட்டங்களுக்கும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து