முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக்ஜாம் புயல்: முன்னெச்சரிக்கைகள் மூலம் பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      தமிழகம்
CM-1 2023-12-03

Source: provided

சென்னை : மிக்ஜாம் புயல் நடவடிக்கையாக தொடர் முன்னெச்சரிக்கைகள் மூலம் பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளோம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே நாளை 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது. 

இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, 

அவசரகால கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. 2.44 கோடி மக்களுக்கு புயல் முன்னெச்சரிக்கை குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. தொடர் முன்னெச்சரிக்கைகள் மூலம் பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளோம்.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் ஆயிரம்  மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் முழு அர்ப்பணிப்போடு மேற்கொள்ள வேண்டும். புயலின் போது மரங்கள் மின்கம்பங்கள் கீழே விழும் அபாயம் உள்ளதால், மக்கள் வெளியே வராமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து