முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2025      இந்தியா
Rajnath 2024-11-24

Source: provided

லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

லக்னோவில் பிரமோஸ் விண்வெளி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதிகளை காணொலி காட்சி மூலம் பாதுகாப்புத்துறை அமைச்சர் திறந்து வைத்தார். அந்த விழாவில் பேசிய அமைச்சர் கூறியதாவது:  இந்தியாவுக்கு எதிராக இருந்தவர்களையும், நமது நாட்டைத் தாக்கி பல ஆயிரம் குடும்பங்களை அழித்த பயங்கரவாதிகளையும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது ராணுவம் நீதியின் முன் நிறுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த தேசமும் இன்று நமது ராணுவத்தின் துணிச்சலை போற்றுகிறது.

ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமில்லை. அது, இந்தியாவின் அரசியல், சமூகம் மற்றும் ராணுவ மன உறுதியின் சின்னம். இந்த நடவடிக்கை, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியையும், ராணுவ வலிமையையும் எடுத்துரைத்திருக்கிறது.  பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி உரிய பதிலடியை கொடுத்தன. 

இந்தியாவுக்குள் பயங்கரவாத தாக்குல் நடத்தினால் என்ன நடக்கும் என்பதை உலகமே பார்த்தது.  பயங்கரவாதத்துக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைப் பின்பற்றி, இது புதிய இந்தியா என்றும், எல்லைக்குள் மற்றும் எல்லைக்கு அப்பால் என பயங்கரவாத்துக்கு எதிராக பயனுள்ள நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து