முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2025      தமிழகம்
CM 2024-05-31

Source: provided

ஊட்டி : 5 நாட்கள் பயணமாக  இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கவும், கவரவும் மாவட்டம் நிர்வாகம் சார்பில் கோடைக்காலத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது.

கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகையில் அமைந்துள்ள புகழ்பெற்ற உதகை ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சி திங்கள்கிழமை (மே 12) வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்பும் 127-ஆவது உதகை மலா்க் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 15-ம் தேதி முதல் மே 25-ம் தேதி வரை 11 நாள்கள் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி மே 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதையடுத்து குன்னூர் காட்டேரி பூங்காவில் முதன்முறையாக மலைப் பயிர்கள் கண்காட்சி மே 30, 31 ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

அதன்படி இந்தாண்டுக்கன மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற 16-ம் தேதி தொடங்கி 21-ம் தேதிவரை நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த வாரத்தில் மலர் கண்காட்சிக்கான அனைத்து பணிகளையும் முடிக்க முடிவு செய்து இருப்பதாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், 5 நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) ஊட்டி செல்கிறார். இதற்காக இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்லும் முதல்வர், அங்கிருந்து சாலை வழியாக ஊட்டி செல்கிறார். அங்கு 15-ம் தேதி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

அதன்படி, பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டாக்களை வழங்குகிறார். இதைத் தவிர்த்து தொட்ட பெட்டாவில் பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாற்றுகிறார். ஊட்டி பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் 16-ம் தேதி இரவு அல்லது 17-ம் தேதி காலை சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து