முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. மீது அசைக்க முடியாத ஆதரவை வழங்கிய மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      இந்தியா
Modi 2023-05-10

Source: provided

புதுடெல்லி : பா.ஜ.க. மீது அசைக்க முடியாத ஆதரவை வழங்கிய மக்களுக்கு நன்றி என்று 4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் 3 மாநிலங்களில் பாஜக தனித்து ஆட்சி அமைக்க உள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 

இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்கான அரசியலைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை இந்த முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

பா.ஜ.க. மீது அசைக்க முடியாத ஆதரவை வழங்கிய மக்களுக்கு நன்றி. 4 மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. நல்ல நிர்வாகம், வளர்ச்சி, அரசியல் ஆகியவற்றுக்கு மக்கள் உறுதுணையாக நிற்கின்றனர் என்பதற்கு தேர்தல் முடிவுகள் சாட்சி. 

கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.க.விற்கு வழங்கிய தொடர் ஆதரவிற்கு தெலுங்கானா மாநில மக்களுக்கும் நன்றி .தெலுங்கானா மாநில மக்களுடைய எங்களது பிணைப்பு பிரிக்க முடியாதது, அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். மக்கள் நலனுக்காக தொடர்ந்து அயராது பாடுபடுவோம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து