முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிசோரம் சட்டசபை தேர்தல்: ஆட்சியை கைப்பற்றியது ஜோரம் மக்கள் இயக்கம் : 40 இடங்களில் 27 தொகுதிகளில் அமோக வெற்றி

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      இந்தியா
Election 2023-11-06

Source: provided

அய்ஸ்வால் : மிசோரம் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கையில் ஆளும் மிசோ தேசிய முன்னணி 10 இடங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றது. பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவைப்படும் நிலையில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.

5 மாநிலங்களின் சட்டசபைகளுக்கு கடந்த அக்டோபர் 9-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்படி 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநில சட்டசபைக்கு கடந்த 7-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 80 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து மிசோரமிலும் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. 

ஆனால் மிசோரமில் ஞாயிற்றுக்கிழமை அன்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெறும் என்பதால் வாக்கு எண்ணிக்கையை வேறு தேதிக்கு மாற்றுமாறு தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதனால் மிசோரமில் நேற்று (4-ம் தேதி) வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி நேற்று (திங்கட்கிழமை) மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 13 மையங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஹெச் லியான்செலா தெரிவித்தார். முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில்  பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. 

இந்நிலையில் மிசோரம் மாநிலத்தில் ஓட்டு எண்ணிக்கை நேற்று (டிச.,4) காலை 8 மணிக்கு துவங்கியது. மொத்தம் 13 மையங்களில் நடக்கும் ஓட்டு எண்ணிக்கையில் ஆளும் மிசோ தேசிய முன்னணி (எம்.என்.எப்) கட்சிக்கு ஆரம்பம் முதல்லே பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 10 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பா.ஜ., 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வென்றன. கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மிசோரம் தேர்தல் (40 தொகுதிகள்):

1)மிசோ தேசிய முன்னணி கட்சி - 10.

2) ஜோரம் மக்கள் இயக்கம் - 27.

3) பாரதிய ஜனதா கட்சி - 2 

4) காங்கிரஸ் கட்சி - 1.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து