முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7-ம் ஆண்டு நினைவு தினம்: சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      தமிழகம்
EPS 2023-12-05

Source: provided

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று  அடையாறில் உள்ள தனது வீட்டில் உள்ள ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பிறகு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கும் சென்று அவர் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், ரமணா, வளர்மதி, கோகுல இந்திரா, கடம்பூர் ராஜூ, டி.கே.எம். சின்னையா, மாதவரம் மூர்த்தி, கமலக்கண்ணன்.மாவட்டச் செயலாளர்கள் தி.நகர் சத்யா, வெங்க டேஷ்பாபு, வேளச்சேரி அசோக், விருகை ரவி, சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஆர்.ஜே.ராஜேஷ், கே.பி.கந்தன், வாலாஜாபாத் கணே சன் மற்றும் பெரும் பாக்கம் ராஜசேகர், துரைப் பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, கழக மாணவரணி துணைச் செயலாளர் வக்கீல் ஆ.பழனி, இளைஞரணி இணைச் செயலாளர் டாக்டர் வி.சுனில், வடபழனி சத்திய நாராயணமூர்த்தி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம். அம்மா நூற்றாண்டு கனவை நெஞ்சில் நிலை நிறுத்தி மக்களுக்கான ஒரே இயக்கம் அ.தி.மு.க. என்பதை நம் செயலில் உறுதிப்படுத்துவோம். மக்கள் பணியே மகேசன் பணியாகக் கொண்டு அயராது உழைப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 11 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago
View all comments

வாசகர் கருத்து