முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் இன்று முதல் புறநகர் ரெயில்கள் அனைத்தும் இயங்கும் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      தமிழகம்
Tairn 2023-05-25

Source: provided

சென்னை : சென்னையில் இன்று முதல் அனைத்து புறநகர் ரெயில்களும் இயங்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழையால், பல இடங்களில் ரெயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி, ரெயில் சேவை முடங்கியது. சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் தடத்தில் பேசின்பாலம் - வியாசர்பாடி இடையே 14-வது பாலத்தில் மழைநீர் தேங்கியது. இதுதவிர, ஆவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் மழைநீரில் மூழ்கியது.

இதுபோல, சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் எழும்பூர் - பூங்கா ரெயில் நிலையம் இடையே, தாம்பரம் - பல்லாவரம் இடையே, பரங்கிமலை ரெயில் நிலையத்திலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால்,சென்னையில் புறநகர் ரெயில்கள் நேற்றும் இயங்கவில்லை. இந்த நிலையில் இன்று முதல் புறநகர் ரெயில் சேவையை  தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து