முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு: தான்சானியாவில் 63 பேர் உயிரிழப்பு

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      உலகம்
Tanzania 2023-12-06

Source: provided

தான்சானியா : தான்சானியாவில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 63 பேர் பலியாகினர். 

கிழக்கு ஆப்ரிக்க நாடான வடக்கு தான்சானியாவின் ஹனாங் மலைக்கு அருகில் ஏற்பட்ட வெள்ளத்தால், அப்பகுதியில் இருந்த வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. 

பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர் மற்றும் 85 பேர் காயமடைந்தனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான மக்களை மீட்க ராணுவமும், மீட்புக் குழுவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

இருந்தும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் சிக்கல்கள் உள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. இதற்கிடையே துபாயில் நடந்த ஐ.நா. காலநிலை மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹசன், உடனடியாக தான்சானியாவுக்கு திரும்புவதற்காக அறிவித்துள்ளார். 

அவர் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள் மீட்புப் பணியை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 11 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago
View all comments

வாசகர் கருத்து