முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்: மேடையில் வடகொரிய அதிபர் கண்ணீர்

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      உலகம்
Kim-Jong-Un 2023 03 30

பியாங்கியாங்க், நாட்டில் உள்ள பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் எனக் கூறி மேடையில் வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன் கண்ணீர் விட்டு அழுதார். 

தலைநகர் பியாங்கியாங்கில் நடந்த பெண்களுக்கான நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும். அதுதான் நம் நாட்டை பாதுகாக்கும். 

பிறப்பு விகிதம் குறைவதை தடுப்பது மட்டுமின்றி குழந்தைகளை பராமரித்து நன்றாக வளர்க்க வேண்டும். முறையாக கல்வி வழங்க வேண்டும். இதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன்' என பேசினார்.

இப்படி பேசும் போது அதிபர் கிம்ஜாங் உன் கண்கலங்கினார். இதையடுத்து அவர் தனது கையில் இருந்த வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்து கண்ணீரை துடைத்து கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

தற்போதைய சூழலில் ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி நடப்பு ஆண்டில் வடகொரியா பெண்களிடம் குழந்தை பிறப்பு சராசரி என்பது 1.8 என்ற அளவில் உள்ளது. இது வடகொரியாவின் அண்டை நாடுகளை விட அதிகம்தான். இருப்பினும் பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என அதிபர் கிம்ஜாங் உன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து