முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் மர்ம நபர்களால் லஷ்கர் பயங்கரவாதி சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      உலகம்
Gun 2023-10-05

கராச்சி, பாகிஸ்தான் கராச்சியில் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பை சேர்ந்த முக்கிய பயங்கரவாதி ஒருவன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனது பெயர் அட்னான் அகமது என்கிற அபு ஹன்சாலா என தெரியவந்துள்ளது. 

சம்பவத்தன்று இவனை வீட்டின் அருகே மர்மநபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் தலை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அட்னான் அகமது உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டான். 

அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். அவனை சுட்டுக்கொன்றது யார்? என்று தெரியவில்லை.சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி அட்னான் அகமது லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் மிக முக்கியமானவராக திகழ்ந்து வந்துள்ளான். 

அந்த அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீதுவின் நெருங்கிய கூட்டாளியாகவும், வலது கரமாகவும் இருந்து வந்துள்ளான். ஹபீஸ் சயீது காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் நடந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீதான தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் ஆவான்.

அட்னான் அகமது இந்தியாவில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று உள்ளான். பாகிஸ்தானை பொறுத்தவரை சமீப காலமாக பல பயங்கரவாதிகள் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. 

கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியான மவுலானா மசூத் அசாரின் நெருங்கிய கூட்டாளியான தாவூத் மாலிக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து