முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 3 சதவீத இடங்கள் மட்டுமே புயலில் இருந்து தப்பியது: அண்ணா பல்கலை. ஆய்வில் தகவல்

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      தமிழகம்
MDS-1 2023-12-04

சென்னை, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 சதவீதம் மட்டுமே மிக்ஜாம் புயல் மழை பாதிப்பில் இருந்து தப்பி உள்ளன என்று அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை கடலோர பகுதியில் கடந்த 3 மற்றும் 4-ம் தேதிகளில் சுமார் 17 மணி நேரம் மிக்ஜாம் புயல் நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை நகரம் வரலாறு காணாத மழையை எதிர்கொள்ள நேரிட்டது. இடைவிடாத மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. 

இந்த நிலையில் சென்னையில் எந்தெந்த பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன? எந்தெந்த பகுதிகளில் குறைவான பாதிப்பு ஏற்பட்டது? என்பது பற்றி அண்ணா பல்கலைக் கழகம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 30 சதவீத பகுதிகள் மிக்ஜாம் புயல் மழையால் மிக மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பள்ளிக்கரணை, வேளச்சேரி, பெரும்பாக்கம், தாம்பரம், முடிச்சூர், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு, கோடம்பாக்கம், மாம்பலம் பகுதிகளில் அதிகபட்ச பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. 

அம்பத்தூர் பகுதிகளில் குறைந்தபட்ச பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் மிக மிக குறைவான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பல்வேறு வகையான ஆய்வுகள் மூலம் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் மழை பாதிப்புக்கான காரணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

மழைநீர் கால்வாய்கள் மற்றும் தண்ணீர் வெளியேறும் பகுதிகளில் ஆக்கிரமிப்பு காரணமாகவே மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 சதவீதம் மட்டுமே மழை பாதிப்பில் இருந்து தப்பி உள்ளன. 97 சதவீத பகுதிகள் மிக்ஜாம் புயல் மழையால் பாதிப்பை சந்தித்து உள்ளன. இவ்வாறு  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து