முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'மிக்ஜம்' புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேசிய பிரதமர் மோடி உறுதி

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      தமிழகம்
CM-PM-2023-12-07

சென்னை, 'மிக்ஜம்' புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது. இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

 தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது. மழை ஓய்ந்தபிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து, தமிழகத்திற்கு இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ. 5,060 கோடியினை உடனடியாக வழங்கிடுமாறு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை டி.ஆர்.பாலு நேற்று வழங்கினார். அப்போது தொலைபேசியில் ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். 

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய மத்தியக் குழுவை அனுப்பி வைக்க பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அப்போது தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து