முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி': மூன்று மாநில தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பேச்சு

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      இந்தியா
mODI 2023-05-25

புதுடெல்லி,  ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேச மாநிலங்களில் பா.ஜ.க.வுக்குக் கிடைத்த வெற்றி கட்சியினரின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேச மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதை அடுத்து, கட்சியின் எம்.பி.கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வந்தபோது, அனைவரும் எழுந்து நின்று கைகளைத் தட்டி வரவேற்பு அளித்தனர். மோடிஜியால் கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக அப்போது கோஷம் எழுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்த வெற்றி தனி நபரின் வெற்றி அல்ல என்றும், கட்சியினரின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றும் கூறினார். மேலும், மோடிஜி என கூறி தன்னை வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம் என்றும் தான் மோடிதான் என்றும் கூறினார். மேலும், தொடர்ந்து கூட்டு முயற்சியுடன் கட்சி முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பா.ஜ.க. எம்.பி.களின் கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "கூட்டத்தில் பிரதமர் மோடி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநிலங்களுடன், மிசோரம் மற்றும் தெலங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. தனது பலத்தை பன்மடங்கு பெருக்கி உள்ளது என்றார். மேலும் அவர், ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். அதாவது, ஆட்சியில் இருக்கும் போது மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி 40 முறை தேர்தலைச் சந்தித்து உள்ளது. அதில் 7 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி 22 முறை வெற்றி பெற்றுள்ளது என்றார். அதேபோல் இங்கே பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள் என நான்கு சாதிகள் மட்டுமே உள்ளனர். நாம் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து