முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 3-வது நாளாக நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      தமிழகம்
CM-2-2023-12-07

சென்னை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று 3-வது நாளாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கினார்.

'மிக்ஜம்' புயல் தமிழக வடமாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் இந்த புயல் காரணமாக அதிகனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது. புயல் கரையை கடந்து மழை ஓய்ந்தபிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சுமார் 42 ஆயிரம் பேர் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அனகாபுத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். தாம்பரம் மாநகராட்சி, அனகாபுத்துாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, 500 குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின், நிவாரண பொருட்களை வழங்கினார். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி, பால், பிரெட், பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை அவர் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து