முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜே.சி.பி. வாகனத்தில் சென்று நிவாரணம் வழங்கிய அமைச்சர்

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      தமிழகம்
JCB-2023-12-07

சென்னை, சென்னை வேளச்சேரி பகுதியில் ஜே.சி.பி. வாகனத்தில் சென்று அமைச்சர் எ.வ.வேலு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  சென்னையில் வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியவில்லை என்பதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வெள்ளம் வடியாத பகுதிகளில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை தமிழக அரசும் பல தன்னார்வ அமைப்புகளும் வழங்கி வருகின்றன.  இந்நிலையில் நேற்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஜே.சி.பி. வாகனத்தில் சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்கினார். அங்கு வீடு, வீடாகச் சென்று அவர் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து