முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்பட 10 பா.ஜ.க. எம்.பி.க்கள் ராஜினாமா

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      இந்தியா
BJP 2023-11-05

புதுடெல்லி, சமீபத்தில் நடந்து முடிந்த, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் 9 பேரின் ராஜினாமா கடிதங்களை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று (டிச.7)  ஏற்றுக்கொண்டார்.

சமீபத்தில் நடந்து முடிந்த, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட  மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரகலாத் படேல் உள்பட பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் 9 பேர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தங்களது மக்களவை உறுப்பினர் பதவியை நேற்று முன்தினம் (டிச.6) ராஜினாமா செய்தனர். அவர்களுடன் சேர்த்து மாநிலங்களவை உறுப்பினர் கிரோடி லால் மீனா, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் தாங்கள் வெற்றி பெற்றுள்ள மாநிலங்களில், எம்.எல்.ஏ.க்களாக பொறுப்பேற்க உள்ளனர். மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள எம்.பி.க்கள் விபரம் வருமாறு : மத்திய வேளாண் துறை  அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் படேல், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராகேஷ் சிங், உத்யா பிரதாப் சிங் மற்றும் ரித்தி பதக்,  ராஜஸ்தானைச் சேர்ந்த கிரோடி லால் மீனா, தியா குமாரி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்,  சத்தீஸ்கரை சேர்ந்த கோமதி சாய் மற்றும் அருண் சாவ்.

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரகலாத்சிங் படேல் ஆகிய இருவரும், மத்தியப் பிரதேச எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து