முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் மாளிகை அருகே என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      தமிழகம்
Raj-Bhawan-2023-11-11

Source: provided

சென்னை : கவர்னர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன் கடந்த அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக ரெளடி கருக்கா வினோத் (42) கைது செய்யப்பட்டார். அவர் மீது கிண்டி போலீஸார் 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனர். 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காகதான் பெட்ரோல் குண்டுகளை வீசினேன் என்று வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதன் பின்னர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வினோத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கெனவே வினோத் மீது பெட்ரோல் குண்டு வீசிய பல வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் வேறு பின்னணிகள் இருப்பதாகவும், மத்திய புலனாய்வு அமைப்பு இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கருத்துகளை தெரிவித்து வந்தன. அதன்பேரில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய உள் துறை அமைச்சகம், என்.ஐ.ஏ.வுக்கு உத்தரவிட்டது. 

அதன்படி, என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தொடர்ந்து நேற்று (சனிக்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்களுடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், சம்பவம் நடந்த அன்று, பாதுகாப்புப் பணியில் இருந்த தமிழக ஆயுதப்படை போலீசார் ஒருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து