முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிவாரண பொருட்களை கொள்ளை அடிக்கும் ஹமாஸ் அமைப்பினர் : வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      உலகம்
Israel 2023-12-10

Source: provided

ஜெருசலேம் : காசாவில் பொதுமக்களை தாக்கியதாகவும், சர்வதேச அமைப்புகள் வழங்கிய மனிதாபிமான பொருள்களை கொள்ளையடித்ததாகவும் ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படை குற்றம்சாட்டி உள்ளது.

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். 

இதனிடையே, கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த தற்காலிக போர் நிறுத்தமும் கடந்த 1-ம் தேதி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கி உள்ளது. 

வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதற்கிடையே காசா மக்களுக்கு தேவையான நிவாரண பொருள்களை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் அனுப்பி வருகின்றன. 

இந்நிலையில், காசாவில் பொதுமக்களை தாக்கியதாகவும், சர்வதேச அமைப்புகள் வழங்கிய மனிதாபிமான பொருள்களை கொள்ளையடித்ததாகவும் ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படை குற்றம்சாட்டி உள்ளது. மேலும், ஹமாஸ் அமைப்பினர் திருடும் வீடியோக்களை இஸ்ரேல் பாதுகாப்பு படை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 6 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 2 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து