முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த புதிய முதல்வரை தேர்வு செய்ய ம.பி.யில் இன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      இந்தியா
BJP 2023-11-05

Source: provided

போபால் : மத்திய பிரதேசத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்ய இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது.

230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டமன்றத்தில் பா.ஜ.க. 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரம் ஆகியும் அங்கு அடுத்த முதல்வர் யார்? என்பதை பா.ஜ.க. இன்னும் அறிவிக்கவில்லை. 

இந்த நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 

இது குறித்து சிவராஜ் சிங் சவுகான், தனது 'டுவிட்டர் பக்கத்தில் ராம்-ராம் என பதிவிட்டுள்ளது பா.ஜ.க.வினரிடையே பரபரப்பான விவாதத்தை கிளப்பி விட்டது. மற்றொரு பக்கம் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் பட்டேல், கைலாஷ் விஜயவர்ஜியா உள்ளிட்டோர் முதல்வர் பதவியை கைப்பற்றும் முனைப்பில் படு தீவிரமாக உள்ளனர். 

இவர்களுடன் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவும் கவனமாக காய்களை நகர்த்தி வருகிறார். இந்த பரபரப்புக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு மத்திய பிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய பிரதேச பா.ஜ.க.வின் சட்டமன்றக் குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 5 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 day ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து