முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு : சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      தமிழகம்
Kurdalam 2023 06 20

Source: provided

தென்காசி : மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக  குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணம் மற்றும் ஐயப்ப பக்தர்கள் நேற்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

மேலும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் புனித நீராட குவிந்தனர். நேற்று காலை முதலே அருவி கரைகளில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். 

மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததன் காரணமாக அருவிக் கரைகளில் அமைந்துள்ள கடைகளில் பழங்கள் உணவுப் பொருட்களின் விற்பனையானது அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 5 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 day ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து