முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக்ஜம் புயல்: மக்களுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை : அரசுக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      தமிழகம்
OPS 2022 12 29

Source: provided

சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக மக்களுக்கு தொற்று நோய் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, 

கனமழை பெய்யும் போது பாதிக்கப்படும் மக்களை அங்கிருந்து மீட்பதும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதும் அரசின் கடமை.  கனமழை ஓய்ந்த பிறகு மக்களை நோய்களிலிருந்து பாதுகாக்க வேண்டியதும் அரசின் கடமை.

அண்மையில் பெய்த அதிகனமழை காரணமாக  பொதுமக்களிடையே தொற்று நோய்கள் பரவுவதற்கான அபாயம் உள்ளது. நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற்றால்தான் எச்செல்வத்தையும் மக்கள் எளிதாக பெற முடியும். 

நமது சமுதாயம் திறம்பட செயல்படுவதற்கும், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் ஆரோக்கியம் அவசியம் என்பதையும் கருத்தில் கொண்டு, தொற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ முறைகளை மேற்கொள்ளவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து