முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் 7 வாகன சேவை: திருமலையில் 16-ம் தேதி ரத சப்தமி விழா நடக்கிறது

புதன்கிழமை, 31 ஜனவரி 2024      ஆன்மிகம்
Tirumalai 2024-01-31

Source: provided

திருமலை : திருமலையில் ரத சப்தமி விழா வருகிற 16-ம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த ரத சப்தமி மினி பிரமோற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது. இதற்காக திருமலைக்கு திரளான பக்தர்கள் வருவதற்கு தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. 

ரத சப்தமி அன்று 7 வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்திலும், 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் ஒரு மணி முதல் 2 மணி வரை  அனுமந்த வாகனத்திலும் மாட வீதிகளில் மலையப்பசாமி வலம் வந்து அருள் பாலிக்கிறார். 

தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 3 மணி வரை சக்கர ஸ்நானம், மாலை 4 முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 வரை சர்வபூபால வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை  சந்திரபிரபை வாகனத்திலும் உலாவருகிறார். 

ரதசப்தமி அன்று கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அதே சமயம் சுப்ரபாதம், தோமாலா மற்றும் அர்ச்சனை தனிமையில் செய்யப்படுகின்றன. இவ்வாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து