முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: எஞ்சிய 3 போட்டிகளில் இருந்தும் விராட் கோலி விலகல்: பி.சி.சி.ஐ

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2024      விளையாட்டு
Verat Koil 2023 08 13

Source: provided

மும்பை : இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் எஞ்சிய 3 போட்டிகளில் இருந்தும் விராட் கோலி விலகியுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

சமநிலையில்... 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் ஆளுக்கு ஒன்று வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தனிப்பட்ட காரணங்களுக்காக முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எஞ்சிய போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்.

பி.சி.சி.ஐ தகவல்...

இந்த விஷயம் தற்போது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் இப்படி விராட் கோலி இந்த தொடரில் இருந்து முற்றிலுமாக விலக என்ன காரணம்? என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்த விஷயத்திற்கான தெளிவான விளக்கத்தை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அவர்கள் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டதாவது :

மதிக்கிறோம்... 

'விராட் கோலியின் பிரைவசியை நாங்கள் மதிக்கிறோம். அவர் எங்களிடம் முறைப்படி அவரது தனிப்பட்ட முடிவை தெரிவித்து விட்டே இந்த விடுப்பினை எடுத்துள்ளார். எனவே மீண்டும் ஒருமுறை நாங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்வது ஒரே ஒரு விஷயம்தான். விராட் கோலி விலகல் குறித்து எந்த ஒரு வதந்தியையோ, யூகங்களையோ பரப்ப வேண்டாம். அவரது முடிவிற்கு மதிப்பு கொடுக்க வேண்டியது முக்கியம். எனவே அவரது விஷயத்தில் யாரும் எந்த தவறான தகவலையும் பரப்ப வேண்டாம்' என பி.சி.சி.ஐ கேட்டுக் கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து