முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.க்களின் அமளியால், பதவியில் இருந்து கூட விலக நினைத்தேன் : துணை ஜனாதிபதி தன்கர் வேதனை

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2024      இந்தியா
jagdeepdhankhar-2023-05-05

Source: provided

புதுடெல்லி : மாநிலங்களவையில் எம்.பி.க்களின் அமளியால் பதவியில் இருந்து கூட விலக நினைத்ததாக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் வேதனை தெரிவித்துள்ளார். 

மாநிலங்களவையில் நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர்கள் சரண் சிங் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருது வழங்கும் மத்திய அரசின் முடிவு குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்காக சரண் சிங்கின் பேரனும், ராஷ்ட்ரீய லோக்தள தலைவருமான ஜெயந்த் சிங்கை பேச அவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் அழைத்தார். 

இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ஜெயந்த் சிங்குக்கு எதிராக சில கருத்துகளை வெளியிட்டார். இதனால் கோபமடைந்த ஜெக்தீப் தன்கர், ஜெய்ராம் ரமேசை அவைக்கு தகுதியற்றவர் என தெரிவித்தார். மேலும் மயானத்தில் விருந்து வைப்பவர் என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும், அவையில் நேரம் ஒதுக்குவது தொடர்பாக ஜெக்தீப் தன்கர் மீது அதிருப்தி வெளியிட்டார். பின்னர் பேசிய தன்கர், உறுப்பினர்களின் செயல்பாடுகள் எதிர்பாராதது, வெட்கக்கேடானது, வேதனை மிகுந்தது என தெரிவித்தார். 

மேலும் எம்.பி.க்களின் நடவடிக்கை மிகவும் கீழ்த்தரமாக இருப்பதாக கூறிய தன்கர், தனது மனதில் பல்வேறு எண்ணங்கள் தோன்றுவதாகவும், பதவியில் இருந்து விலகவும் கூட நினைத்ததாகவும் வேதனையை பதிவு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து