முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

கிருஷ்ணகிரி : தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என இறுதியாகவும், உறுதியாகவும் கூறுகிறோம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- 

மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றி தி.மு.க. அரசாங்கம் நடத்துகிறது . அத்தியாவசியப் பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது .மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாங்கமாக தி.மு.க. இருக்கிறது. 

அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் காலத்தில் தமிழக மக்கள் பாதுகாப்பாக உணருவார்கள். பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க.  மறைமுக உறவு வைத்திருப்பதாக சிலர் கூறுகிறார்கள். முன்பே அறிவித்து விட்டோம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என இறுதியாகவும், உறுதியாகவும் கூறுகிறோம். சரியான நேரத்தில், அ.தி.மு.க. கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும். 

தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே தொகுதிகளை வழங்க தி.மு.க. மறுக்கிறது. ஆனால் வாக்களிக்கும் மக்களை மட்டுமே அ.தி.மு.க. நம்புகிறது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து