முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.தேர்தலில் 370 இடங்களுக்கு மேல் பாரதீய ஜனதா கைப்பற்றும் : ம.பி.யில் பிரதமர் மோடி நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2024      இந்தியா
Modi 2023-05-10

Source: provided

ஜபுவா : வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 370-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். 

மத்திய பிரதேச மாநிலம் ஜபுகா மாவட்டத்தில் பழங்குடின மக்களுக்கு மத்தியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

வரும் மக்களவைத் தேர்தலில் 543 தொகுதிகளில் 370-க்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்காக கடந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பா.ஜ.க. பெற்ற வாக்குகளை விட கூடுதலாக 370 வாக்குகள் பெறுவதை வாக்களார்கள் உறுதி செய்ய வேண்டும். 

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்கள் கிடைக்கும் என இப்போது தெரிவிக்கின்றனர். பா.ஜ.க.வின் தாமரைச் சின்னம் 370-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

நான் ஜபுகாவுக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக வரவில்லை. சமீபத்தில் நடந்த மாநில தேர்தலில் மக்கள் அளித்த அளப்பரிய ஆதவுக்காக நன்றி தெரிவிக்க ஒரு சேவகனாக இங்கு வந்திருக்கிறேன். எங்களுடைய இரட்டை இயந்திர ஆட்சி மத்திய பிரதேசத்தில் இரட்டை வேகத்தில் வேலை செய்கிறது. 

இந்தக் கூட்டத்துக்கு வருவதற்கு முன்பாக மாநிலத்தில் ரூ.7,550 கோடி ரூபாய்க்கான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக ஏழைகள், விவசாயிகள் மற்றும் பழங்குடிகளை புறக்கணித்து வந்துள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும்தான் கிராமத்தினர், ஏழைகள், விவசாயிகள் காங்கிரஸ் கட்சியின் நினைவுக்கு வருவார்கள்.

தங்களது தோல்வியை அறிந்து கொண்ட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், கடைசி தந்திரத்தை கையாளுகின்றன. கொள்ளை மற்றும் பிரித்தாளுவது என்பது காங்கிரஸ் கட்சியின் கொள்கை. இவ்வாறு பிரதமர் மோடி  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து