முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடிக்கு எப்போதும் பிடித்தமான மாநிலம் தமிழ்நாடு: ஜே.பி.,நட்டா பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2024      தமிழகம்
JP-Natta 2023-09-12

Source: provided

சென்னை : பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு எப்போதும் முக்கியமானது. பா.ஜ.க. தலைவர்களின் இதயங்களில் எப்போதும் தமிழ்நாடு இருக்கிறது. பாரதத்தின் வலிமையை நிலை நிறுத்த தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார் 

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிகழ்வில்  கலந்து கொள்ள அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று மாலை சென்னை வந்திருந்தார். தனி விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் பகுதியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நிகழ்ச்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து  சென்னை மின்ட் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜே.பி. நட்டா பேசியதாவது: 

திருவள்ளூவர், பாரதியார் ஆகியோரின் பங்களிப்பு நம்மை மேலும் ஊக்கப்படுத்துகிறது. பா.ஜ.க. தலைவர்களின்  இதயங்களில் எப்போதும் தமிழ்நாடு இருக்கிறது. பாரதத்தின் வலிமையை நிலை நிறுத்த தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது.  பிரதமர் மோடிக்கு பிடித்தமான மாநிலம் தமிழ்நாடு. 

ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவை உறுதிப்படுத்தியவர்  எம்.எஸ் சுவாமிநாதன். வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவித்து கவுரவப்படுத்தி  உள்ளது மத்திய அரசு. இண்டியா கூட்டணி என்பது குடும்ப கூட்டணி. வாரிசு அரசியலை கொண்ட கட்சிகள் தான்  அந்த கூட்டணியில் இருக்கின்றன. 

தி.மு.க.வின் மோசமான ஆட்சியால் தமிழகம் சீரழிந்து விட்டது. மாநில அரசுக்கு மனசாட்சி , ஜனநாயகம்  இல்லை. நான் வரும் போது தெரு விளக்குள் அணைக்கப்பட்டன. கடைகள்  மூடப்பட்டன. இது எமர்ஜென்சி போல் உள்ளது.

தி.மு.க ஆட்சியை மக்கள் தூக்கி எறியும் காலம் வந்து விட்டது.  செல்வாக்கு நிறைந்த தமிழ்நாட்டில் மோசமான ஆட்சியாளர்கள் உள்ளனர். தமிழகத்தின் காலாசாரம் பண்பாடு  கொள்ளும் விதத்தில் உள்ளது. 2024-ல் மோடி ஆட்சி அமைக்க உங்கள் ஆதரவை தர வேண்டும். 95 சதவீத செல்போன்  உதிரி பாகங்கள் இந்தியாவில் தயாராகிறது. உலக பொருளாதாரத்தால் நம்மை ஆண்ட இங்கிலாந்தை பின்னுக்கு  5-ம் இடத்திற்கு வந்துள்ளோம். பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரத்தை 3-வது இடத்திற்கு  கொண்டு வருவோம். இவ்வாறு நட்டா பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து