முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 போட்டி; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2024      விளையாட்டு
Australia 2023-12-08

Source: provided

அடிலெய்டு : வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது.இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 8 சிக்சர்களுடன் 120 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதி கட்டத்தில் அவருடன் ஜோடி சேர்ந்த டிம் டேவிட்டும் அதிரடியாக விளையாடினார். 14 பந்துகளை சந்தித்த டிம் டேவிட் அதில் 31 ரன்கள் குவித்தார்.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 241 ரன்கள் குவித்துள்ளது. 

இதையடுத்து  242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஆடியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரண்டன் கிங் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் கிங் 5 ரன், சார்லஸ் 24 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய பூரன் 18 ரன், ஹோப் 0 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் ரோவ்மன் பவல் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் ரூதர்போர்டு 0 ரன், ரசல் 37 ரன், ஷெப்பர்ட் 12 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெலிப்படுத்திய பவல் அரைசதம் அடித்த நிலையில் 63 ரன்களில் அவுட் ஆனார்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 34 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 13ம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து