முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் இன்று ரத சப்தமி விழா

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2024      ஆன்மிகம்
Tirupati 2023 03 30

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி எனும் மினி பிரமோற்சவ விழா இன்று நடைபெறுகிறது. 

ரதசப்தமி விழாவை முன்னிட்டு கோவில் வளாகம், 4 மாட வீதிகள் மற்றும் திருப்பதி மலை முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில், 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதன்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வருகிறார். 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும், 2 மணி முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடைபெறுகிறது.

மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்சம் வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும் ஏழுமலையான் வீதி உலா வருகிறார். 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரப வாகனத்தில் உலா வருகிறார். 

ரதசப்தமி விழாவை காண நேற்று காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து