முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானத்தில் திடீர் கோளாறு: நூலிழையில் உயிர்தப்பிய நடிகை ராஷ்மிகா மந்தனா

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2024      சினிமா
Rashmika 2023-12-20

Source: provided

மும்பை : விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் நூலிழையில் உயிர்தப்பியுள்ளார் புஷ்பா பட புகழ் நடிகை ராஷ்மிகா மந்தனா.

மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்த விமானம் 30 நிமிடத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா மற்றும் அவருடன் நடிகை ஷ்ரத்தா தாஸ் பயணம் செய்து இருந்த இருந்தனர்.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷ்ரத்தா தாஸுடன் இருக்கும் ஒரு சுயபடத்தை வெளியிட்டு, "நாம் மரணத்திலிருந்து தப்பித்தோம்..." எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகிய அனிமல் படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா நடித்து இருந்தார். இவர் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து