முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பர்த் மார்க்

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2024      சினிமா
Birth-Mark 2023-02-19

Source: provided

நேஞ்சுரல் பர்த்’ (Natural Childbirth) என்று சொல்லக்கூடிய இயற்கை குழந்தை பிறப்பை களமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘பர்த் மார்க்’

இம்மாதம் இத் திரைப்படம்  வெளியாக உள்ள நிலையில் இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் மற்றும் தயாரிப்பாளரும், கதையாசிரியருமான ஸ்ரீராம் சிவராமன் கூறுகையில், “இது தான் எங்களுடைய முதல் படம். புதிதாக செய்ய வேண்டும் என்று நினைத்தோம், அதற்காக பல கதைகளை எழுதினோம். அப்போது தான் நேஞ்சுரல் பர்த் பற்றி விக்ரம்  கூறினார். அது பற்றி நாங்கள் நிறைய படித்தோம். அப்போது நிறைய சுவாரஸ்யமான விசயங்கள் எங்களுக்கு தெரிய வந்தது. இந்தியாவின் சில மாநிலங்களில் நேஞ்சுரல் பர்த் முறை இருந்தாலும், அதை கமர்ஷியலாக அதிகம் பேர் செய்வதில்லை, சில மாநிலங்களில் மட்டும் அந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது பற்றி விரிவாகப் பேசுவதற்கு நிறைய விசயங்கள் இருந்ததால், எங்களுடைய முதல் படமாக இதை தேர்வு செய்தோம்.

நேஞ்சுரல் பர்த் என்பதால், அறுவை சிகிச்சை முறையிலான குழந்தை பிறப்புக்கு எதிராகவோ அல்லது இயற்கை குழந்தை பிறப்புக்கு ஆதரவாகவோ நாங்கள் பேசவில்லை. அதை ஒரு களமாக எடுத்துக்கொண்டு ஒரு தம்பதியின் மனப்போரட்டங்களையும், தனிமைப்படுத்துதலில் அவர்களுக்கு இடையே ஏற்படும் மாற்றங்கள், அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதனால் அவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், இதை எல்லாம் தாண்டி மிர்னாவின் குழந்தை பிறப்பு எப்படி நடக்கிறது?, படத்தில் இடம்பெறும் லொக்கேஷன்கள் போன்றவை தான் படத்தின் முக்கிய அம்சங்கள், அவற்றை தான் நாங்கள் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறோம்.

த்ரில்லர் ஜானர் என்று சொல்வதை விட, படம் பார்க்கும் ரசிகர்கள் படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை த்ரில்லர் மனநிலையில் இருப்பார்கள், அந்த அளவுக்கு படத்தில் எதாவது ஒன்று நடந்துக்கொண்டு தான் இருக்கும். அது என்ன? என்ற எதிர்பார்ப்புடன் பார்வையாளர்களை படம் பார்க்க வைக்கும்படி தான் திரைக்கதை அமைத்திருக்கிறோம், படம் பார்க்கும் போது நிச்சயம் நீங்களும் அதை உணர்வீர்கள். என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து