முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 2,650-க்கு உணவு சாப்பிட்ட நபர் ரூ.8.30 லட்சம் டிப்ஸ் வழங்கினார் : அமெரிக்க உணவகத்தில் சுவாரஸ்யம்

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2024      உலகம்
America-Restaurant 2023-02-

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க மாகாண உணவகம் ஒன்றில் சாப்பிட்ட நபர் ஒருவர், ஒட்டல் பணியாளருக்கு ரூ. 8.30 லட்சம் டிப்ஸ் வழங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் அமைந்துள்ளது தி மேசன் ஜார் கபே என்ற உணவகம். இந்த உணவகத்திற்கு  சில நாட்களுக்கு முன்பு மார்க் என்பவர், காலை உணவு சாப்பிட சென்றுள்ளார். தொடர்ந்து அவர் சாப்பிட்டதற்கான தொகை 32 டாலருக்கான (ரூ.2,650) பில்லை அவரது மேஜையில் ஓட்டல் பணியாளர் வைத்துச் சென்றுள்ளார்.

சில நிமிடம் கழித்து வந்து அந்த பில்லை எடுத்துப் பார்த்த பணியாளர் அதிர்ச்சி அடைந்தார். காரணம், அந்தப் பில்லில் டிப்ஸ் பிரிவில் 10 ஆயிரம் டாலர் என்று எழுதப்பட்டிருந்தது. 

பொதுவாக அந்த உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் பில் தொகையில் 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரையிலேயே டிப்ஸ் வழங்குவது வழக்கம். ஆனால், மார்க் 30,835 சதவீதம் டிப்ஸாக வழங்கியுள்ளார்.

இது குறித்து அந்த பணியாளர் உணவகத்தின் மேலாளரிடம் தெரிவித்தார். உடனே, மேலாளர் டிம் ஸ்வின்னி, அந்த வாடிக்கையாளரிடம் சென்று, 

டிப்ஸ் தொகையில் 10 ஆயிரம் டாலர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். தவறுதலாக எழுதி விட்டீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், இல்லை. அந்தத் தொகையைத்தான் நான் டிப்ஸாக வழங்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். 

இது குறித்து மார்க் கூறும் போது, என்னுடைய ஆத்ம நண்பர் இறந்து விட்டார். அவரது இறுதிச் சடங்குக்காகவே நான் இந்த ஊருக்கு வந்துள்ளேன். நண்பரின் நினைவாக இந்த டிப்ஸை வழங்க விரும்பினேன் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து