முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென்மார்க்கில் இளம் ஜோடிகளின் திருமண இடமாக மாறிய ஒளி திருவிழா

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2024      உலகம்
Denmark 2023-02-19

Source: provided

டென்மார்க் : டென்மார்க் நாட்டில் நடைபெற்று வரும் ஒளித் திருவிழா அந்நாட்டை சேர்ந்த பல இளம்ஜோடிகளின் திருமண இடமாக மாறியுள்ளது. அந்த திருவிழாவிற்கு வரும் பலர் இந்த சுவாரசியத்தை பார்த்து ரசித்து செல்கின்றனர். 

திருமணம் நடைபெறுகின்ற நாள் மணமக்கள் அணிகின்ற உடை போன்று திருமணம் நடக்கும் இடமும் கூட அந்த நாள்களை இன்னும் சிறப்பாக்கி விடுகிறது. அது போன்ற ஒரு இடத்தை செய்ய காத்திருந்த டென்மார்க் ஜோடிகளுக்கு பரிசாக அமைந்துள்ளது இந்த ஒளித்திருவிழா.

அந்த நாட்டின் கோபன்ஹெகன் நகரில் 7-வது ஆண்டாக ஒளித்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் தொடங்கும் இந்த திருவிழாவை காண அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். மின்விளக்குகளை கொண்டு கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வடிவங்கள் பார்வையாளர்களை வியக்கவைக்கும் வகையில் அமைத்துள்ளன.

அந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாக அமைக்கப்பட்டுள்ள பிக்சல் எர்த் என்று பெயரிடப்பட்டுள்ள வடிவம் இளம் ஜோடிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 15-க்கும் மேற்பட்ட ஜோடிகள் அங்கு திருமணம் செய்துகொண்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அந்த வடிவத்தை உருவாக்கியவரின் திருமணமும் அங்கேயே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து