முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி.க்கு எதிரான 4-வது டெஸ்ட்: ஜஸ்ப்ரிட் பும்ராவிற்கு ஓய்வு?

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2024      விளையாட்டு
Bumra 2023 08 18

Source: provided

ராஞ்சி : இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முன்னிலை....

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியிலிருந்து ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணிச்சுமை காரணமாக... 

பணிச்சுமை காரணமாக அவருக்கு ஏற்கனவே 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும் அந்த போட்டியிலிருந்து மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ராவிற்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 4-வது போட்டியின் முடிவை பொறுத்தே அவர் கடைசி போட்டியில் இடம்பெறுவாரா இல்லையா என்பது தெரிய வரும் என தகவல் வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து