முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்காய ஏற்றுமதிக்கான தடை மார்ச் மாதம் வரை தொடரும் : மத்திய அரசு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2024      இந்தியா
Onion

Source: provided

புதுடெல்லி : வெங்காய ஏற்றுமதிக்கான தடையில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த டிசம்பர் 8-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி மார்ச் 31-ம் தேதி வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.   

இந்த நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கான தடையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி மார்ச் 31-ம் தேதி வரை தடை தொடரும் என்றும் மத்திய அரசின் நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார். 

மேலும் நுகர்வோருக்கு நியாயமான விலையிலும், போதுமான அளவிலும் உள்நாட்டிலேயே வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து