முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி., தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இன்று தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர் ஆலோசனை

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2024      இந்தியா
Parliament 2023 05 27

Source: provided

சென்னை:பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகிறார். அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கருத்து கேட்கிறார்.

இந்தியாவில் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான சூழலை அடைந்துள்ளது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று சென்னை வருகிறார். இன்று காலை 11.30 மணிக்கு அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கருத்து கேட்கிறார். மதியம் 1 மணி வரை இந்த கருத்து கேட்பு நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு 8 மணி வரை இந்த கூட்டம் நடைபெறும்.

நாளை (24-ந் தேதி) தென் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார். அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை, தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார். மதியத்துக்கு பிறகு தலைமைச் செயலாளர் டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவரிக்கிறார். அதன் பிறகு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து