முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இ.பி.எஸ். பெயரில் 76 விருப்ப மனுக்கள் பெற்ற அ.தி.மு.க. தகவல் ஐ.டி. பிரிவினர்

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2024      தமிழகம்
eps

Source: provided

சென்னை:மக்களவைத் தேர்தலில் போட்டியிட பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் 76 விருப்ப மனுக்கள் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று பெறப்பட்டன.

மக்களவைகத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில்,  அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில்,  மக்களவைத் போட்டியிட விரும்புவோர் தங்களது விருப்பம் மனுக்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என அ.தி.மு.க. தலைமை அறிவித்திருந்தது.  அதன்படி,  கடந்த 21 ஆம் தேதி முதல் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ் சத்யன் தலைமையிலான தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட பொதுச்செயலாளர் பெயரில் 76 விருப்ப மனுக்கள் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பெற்றனர்.  தொடர்ந்து”#AMMA 76 “புரட்சி தமிழரின் தலைமையில் தேசிய தலைமையை தீர்மானிப்போம்” என்ற விளம்பர பதாகை வெளியிடப்பட்டது.

தொடர்ந்து,  செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலச் செயலாளர் ராஜ் சத்யன் கூறியதாவது: “யார் என்ன சொன்னாலும்,  அ.தி.மு.க. ஒன்றுதான் வெற்றி பெற முடியும் என்பது தான் கள எதார்த்தம்.  மாநில உரிமைகள் எதை பற்றியும் தேசிய கட்சிகள் எதுவும் கவலைப்படவில்லை,  இங்கு ஆட்சி செய்யும் திமுக அவர்கள் குடும்பத்தின் பற்றி மட்டும் தான் யோசிக்கிறார்கள்.  மேலும், 40க்கு 40 தொகுதியும் வெற்றி பெற்று தேசிய தலைமையை தீர்மானிக்கும் இடத்தில் இருப்போம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து