முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனிவேல் தியாகராஜனுக்கு ஐ.டி. துறையை வழங்கியது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2024      தமிழகம்
Stalin

Source: provided

சென்னை:பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை நிதியமைச்சர் பதவியில் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மாற்றியதற்கான காரணம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் (UmagineTN) தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தபாக்கம் உலக வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.  பின்னர்  நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் 2 ஆண்டுகளில் நிதியமைச்சராக மிகச் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.  நிதித்துறையை போலவே தகவல் தொழில்நுட்பத் துறைக்கும் மாற்றங்கள் தேவைப்பட்டது.  அதனால் அவரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக நியமித்தேன்.  நான் கொடுத்த பொறுப்பை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக செய்து இருக்கிறார்.  ஐடி துறையின் வளர்ச்சியும் முன்னேற்றமும் தான் திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை.

சென்னையில் 1000 வைஃபை ஹாட்ஸ்பாட் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  நிதிநிலை அறிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.  புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்க புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க இந்த ஆண்டு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.  வளர்ச்சி என்பது வெறும் எண்களில் மாற்றம் அல்ல மக்களின் வாழ்க்கை தரத்தில் காட்டுகிறோம்” இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து