முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் விளையாட்டு துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2024      விளையாட்டு
23-Ram-54

Source: provided

சென்னை:விளையாட்டு துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் சர்வதேச,  தேசிய மற்றும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்க தொகைக்கான காசோலை மற்றும் 3 சதவீத விளையாட்டு வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டிற்கு கீழ் 4 வீராங்கனைகளுக்கு அரசு பணி ஆணை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.16.31 கோடி மதிப்பில் 601 வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

“கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ. 3.80 கோடி உயரிய ஊக்கதொகை வழங்கி உள்ளோம். விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் விளையாட்டு துறைக்கு பாராட்டும் அங்கீகாரமும் குவிந்து வருகிறது. இதையடுத்து, விளையாட்டுத்துறையில் சிறந்த மாநிலம் என்ற விருதை தமிழ்நாடு பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு விருது பட்டியலில் 8-வது இடத்தில் இருந்தது. தொடர்ந்து,  இந்த ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் 38 தங்கப்பதக்கம் 39 வெண்கல என மொத்தம் 98 பதக்கங்கள் வென்று, தமிழ்நாடு இரண்டாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்தியாவில் விளையாட்டு துறையில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பமாக உள்ளது.  முதலமைச்சரின் சொந்த நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் விளையாட்டு துறைக்காக கொடுத்துள்ளார்.  மேலும், விளையாட்டு துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது” இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து