முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் கிராமங்களின் வளர்ச்சிக்கு கூட்டுறவு துறைக்கு முக்கிய பங்கு : பிரதமர் நரேந்திரமோடி பேச்சு

சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2024      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுடில்லி : நாட்டில் கிராமங்களில் வளர்ச்சியை உருவாக்குவதில் கூட்டுறவு துறை முக்கிய பங்கு வகிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கூட்டுறவு துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: வளமான பொருளாதாரத்தை உருவாக்குவதிலும், கிராமங்களில் வளர்ச்சியை உருவாக்குவதிலும் கூட்டுறவு துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல் கிராமங்களில் வளர்ச்சியை உருவாக்குகிறது. விவசாயிகள் பயன்பெறும் வகையில், கூட்டுறவு கடன் சங்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கில் பா.ஜ., அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்திருந்ததாவது., நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதற்கான எந்த முயற்சியையும் நமது அரசு விட்டு வைக்கவில்லை. கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே சத்தீஸ்கரில் நடந்த "விக்சித் பாரத்" நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: சத்தீஸ்கரில் முந்தைய காங்கிரஸ் அரசு ஏழைகளை வீடுகள் கட்ட விடாமல் தடுத்தது. அரசு தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை பூஜ்ஜியமாக்குவது மத்திய அரசின் குறிக்கோளாக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து