முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் முதல் அமெரிக்காவில் கூகுள் பே சேவை நிறுத்தம்

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2024      உலகம்
G-Pay 2023-02-25

Source: provided

வாஷிங்டன் : வரும் ஜூன் மாதம் 4-ம் தேதி முதல் அமெரிக்காவில் கூகுள் பே வசதி நிறுத்தப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் பே ஆப் என்ற செயலி உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. யுபிஐ மூலம் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் பயனாளர்களின் செல்போன் எண் இருந்தாலே அவர்களுக்கு பணம் அனுப்பவும், அவர்களிடமிருந்து பணத்தைப் பெறவும் முடிகிறது. 

இந்தச் செயலியை உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவிலும் இந்த செயலி இல்லாத செல்போன்களே இல்லை என்னும் அளவுக்கு இதன் பயன்பாடு உள்ளது. டீக்கடை முதல் பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் கூகுள் பே பயன்பாடு அதிகரித்துள்ளது. அமெரிக்காவிலும் லட்சக்கணக்கானோர் கூகுள் பே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வரும் ஜூன் மாதம் 4-ம் தேதி முதல் அமெரிக்காவில் கூகுள் பே வசதி நிறுத்தப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும்தான் இந்த சேவை நிறுத்தப்படுகிறது. இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வழக்கம்போல் அந்த சேவை பயன்பாட்டில் இருக்கும். 

கூகுள் பே செயலி சேவை நிறுத்தப்பட்டாலும் அதில் உள்ள வசதிகளை கூகுள் வாலட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் பே ஆப்பை விட கூகுள் வாலட்டின் பயன்பாடு அமெரிக்காவில் மிக அதிகமாக இருப்பதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.கூகுள் நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பு அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து